குழந்தையுடன் இருந்த பெண்ணை சிதைத்தவனை தூக்கிய போலீஸ் | Woman sexually abused | 2 Offenders | Police
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். சனிக்கிழமை நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் போதையில் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இருவரும் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். பாதிக்கப்பட்ட பெண், கோவில்பட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் விசாரணையில் இறங்கினர். இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. விசாரணையில் மாரி செல்வம், மாரியப்பன் ஆகிய இருவர் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிந்தது.