வங்கதேச இடைக்கால அரசின் திட்டம் என்ன? sheikh hasina| bangladesh| hasina extradition
வங்க தேசத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். வன்முறை உச்சத்தை தொட்டதால், ஆகஸ்ட் 5ல், அவாமி லீக் கட்சி தலைவரும், பிரதமருமான ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார். மேற்கத்திய நாடுகளில் அனுமதி கிடைக்காததால் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கி இருக்கிறார். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஹசீனா ஆட்சியில் நடந்த குற்றங்கள் தெடர்பாக அந்நாட்டு கோர்ட்டில் விசாரணை தொடங்கி உள்ளது. குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை கொலை குற்றங்கள் தொடர்பாக ஷேக் ஹசீனா உட்பட 9 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக, இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் புதிய தலைமை வக்கீல் முகமது தஜுல் இஸ்லாம் தெரிவித்தார்.