சினிமாவை விஞ்சும் அதிர்ச்சி சம்பவம் | LAOS | LAOS Job Scam
வெளிநாட்டு வேலை தேடும் இளைஞர்கள் ஏமாற்றப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தாய்லாந்து அருகே உள்ள லாவோஸ் நாட்டில் ஐடி வேலை இருக்கிறது என்ற தகவல் பரவியது. குறிப்பாக இந்தியா இளைஞர்கள் அதிக அளவில் தேர்வுசெய்யப்பட்டனர். வெறும் இன்டர்வியூ, டைப்பிங் டெஸ்ட்டில் பாஸ் செய்தால் போதும். லாவோஸ் போக விமான டிக்கெட், விசா செலவு எல்லாமே கம்பெனியே பார்த்துகொள்ளும் என ஆசை வார்த்தை கூறினர். கணிசமான சம்பளம், கவுரவமான வேலை ஆசையில் இளைஞர்கள் கிளம்பி சென்றனர். ஆனால் நிறுவனம் சொன்னபடி இளைஞர்கள் லாவோஸ் அழைத்து செல்லப்படவில்லை. இந்தியாவில் இருந்து தாய்லாந்து அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து வேறு வாகனத்தில் லாவோஸ் போனார்கள். ஐடி வேலை என எதிர்பார்த்து சென்றவர்களுக்கு போனதுமே அதிர்ச்சி காத்திருந்தது.