உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலக துப்பாக்கி சுடுதல் சாம்பின்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்: ஒலிம்பிக்கில் இன்னொரு சான்ஸ

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பின்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்: ஒலிம்பிக்கில் இன்னொரு சான்ஸ

#ShootingChampionNeerajKumar #WorldChampionship #DohaGames #NeerajKumar #Olympics2028 #IndianShooter பஞ்சாப்பை சேர்ந்தவர் நீரஜ் குமார், வயது 26. இளம் வயதில் என்சிசியில் சேர்ந்து துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்றார். அதில் சிறப்பாக செயல்பட்ட இவர், தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற்றார். 2021ல் டில்லியில் நடந்த உலகக் கோப்பை போட்டியில், தங்கம் வென்ற இவர், 2022ல் கெய்ரோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்தார். தேசிய, சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் நீரஜ், கத்தாரின் தோஹாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். அங்கு நடந்த, ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் போட்டியில், 346.5 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், 2028 ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா நேரடியாக நுழைவதற்கான இரண்டாவது வாய்ப்பு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெய்பால் மால்வியா 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி வென்றதன் மூலம், இந்தியாவுக்கான நேரடி ஒலிம்பிக் வாய்ப்பு உறுதியானது. தற்போது, நீரஜின் வெண்கலத்தால், இரண்டாவது வாய்ப்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவ 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி