/ தினமலர் டிவி
/ பொது
/ 4 வீரர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது டிராகன் விண்கலம் | Shubhanshu Shukla Return
4 வீரர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது டிராகன் விண்கலம் | Shubhanshu Shukla Return
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற மாதம் 25ம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் வாயிலாக பூமியில் இருந்து 4 வீரர்கள் புறப்பட்டனர். டிராகன் விண்கலத்தில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் பயணம் செய்தனர். டிராகன் விண்கலம் 28 மணி நேர பயணத்திற்கு பின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. திட்டமிட்டபடி 18 நாட்கள் தங்கியிருந்த இக்குழு, அங்கு பல ஆய்வுகளை செய்தது.
ஜூலை 15, 2025