கும்கும் டேஸ்ட் | Small Grain Halva | Super Taste | Madurai
சிறுதானிய ‛அல்வா கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதம் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மதுரை கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் சிறுதானியங்களில் 50 விதமான உணவு வகைகள், கோலங்கள் காட்சிபடுத்தி சத்துணவு பணியாளர்கள் அசத்தினர். விழாவையொட்டி மதுரை கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் காய்கறி மற்றும் சிறுதானியகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக உணவுப் போட்டி மற்றும் சிறுதானிய ரங்கோலி போட்டி நடைபெற்றது. போட்டியில் மாவட்டத்தின் 17 வட்டாரங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிறுதானிய அல்வா, கோதுமை கேக், சாமை ரொட்டி, திணை அல்வா, பீட்ரூட் நாக்சோ, கேழ்வரகு பாயசம் உட்பட 50க்கும் மேற்பட்ட பல்வேறு சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள் மற்றும் சிறுதானியங்களால் குழந்தைகள் ஊட்டச்சத்தை வலியுறுத்தும் விதமாக கோலங்களையும் வரைந்து அசத்தனர்.