அடுத்தடுத்து நடக்கும் விபரீதம்: அலறும் சிவகங்கை மக்கள் |Sivaganga Crime Surge|Snatching Incidents
சிவகங்கையில் கடந்த 2 வாரங்களில் 4 கொலைகள், 5 வழிப்பறி சம்பவங்கள் நடந்திருப்பது மக்களை அதிர வைத்துள்ளது. இன்று காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் காருக்குள் இருந்து சடலாக மீட்கப்பட்டார். ஆவுடை பொய்கை, சாய்பாபா நகரில் ஆள் நடமாட்டமில்லாத காட்டு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நிலம் வாங்குவதற்காக அப்பகுதியை பார்வையிட சென்றவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. breath கடந்த அக்டோபர் 21ம் தேதி, சிவகங்கை, கண்ணமங்கலத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சங்கரை தாயமங்கலத்தில் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. சம்பவத்தில் தொடர்புடைய முத்துவேல், செல்வகுமார், பிரேம்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். அக்டோபர் 27ல் அரியக்குடி ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் பழனியப்பன் முன் விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். இவர் பாஜ மாவட்ட இளைஞரணிச் செயலாளராக பதவி வகித்து வந்தவர். நவம்பர் 2ம் தேதி இரவு சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் சென்னை கிளம்ப காத்திருந்த ராஜேஷ் என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. மூன்று டூவீலர்களில் வந்த 8 பேர் கும்பல் மக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றது.