மோடி வளர்ந்த மாநிலத்தை நாசமாகி விட்டார்கள் Sivaraj Singh Chowhan | Central Agri Minister | Jharkha
ஜார்கண்ட்டில் நடைபெற்ற பாஜ கூட்டத்தில் மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உரையாற்றினார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில், ஜார்கண்ட் மாநிலம் அழிவை நோக்கி செல்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஜார்கண்ட் மாநிலத்தை உருவாக்கினார். பிரதமர் மோடி மாநிலத்தை வளர உதவிகள் செய்தார். ஆனால், இன்றைய ஜார்கண்டை பார்க்கும்போது வலிக்கிறது. ஜே.எம்.எம். அரசால் மாநிலம் அழிவை நோக்கி செல்கிறது. நில மாஃபியா, சுரங்க மாஃபியா, ரவுடி மாஃபியாக்கள் உள்ள கட்சியாக ஜே.எம்.எம். இருக்கிறது. இங்குள்ள மொத்த மணலையும் கொள்ளையடித்து விட்டார்கள், மணலை பக்கெட்டில் விற்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏழைகள் வீடு கட்டுவது சிரமம் ஆகிவிட்டது. ஜேஎம்எம் அரசு, ஏழைகளுக்கான அரசாக இல்லை என சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.