ஒருபக்கம் ராணுவம் வேட்டை: மறுபக்கம் பயங்கரவாத தாக்குதல் social activist shot dead gunmen Kupwara P
பஹல்காமில் பயங்கரவாதிகள் சுட்டதில் 26 சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த சம்பவம் நடந்து ஐந்து நாள் ஆவதற்குள் இன்னொரு சம்பவம் காஷ்மீரை அதிர வைத்துள்ளது. காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள Kani Khas area கானி காஸ் பகுதியைச் சேர்ந்தவர் Ghulam Rasool Magray குலாம் ரசூல் மக்ரே. வயது 45. சமூக சேவகர். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த குலாம் ரசூலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிலைமை கவலைக்கிடமானதால் ஸ்ரீநகர் ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார். குலாம் ரசூலை சுட்டவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ஆனாலும், இது, பயங்கரவாதிகளின் செயலாகத்தான் இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகள் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்கள்; புகலிடம் கொடுப்பதாக சந்தேகம் உள்ள நபர்கள் என 2000 பேரை பிடித்துச் சென்று பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10க்கு மேற்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகளை இடித்துத் தள்ளியும் ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. காஷ்மீரின் பல மாவட்டங்களில் வீடு வீடாக பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தி வரும் பரபரப்பான சூழலில், குப்வாரா மாவட்டத்தில் சமூக சேவகர் வீடு புகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.