பக்காவா பிளான் போட்டும் போலீசில் சிக்கிய பின்னணி | Mother in law killed | Son in law arrested | Ac
ஆந்திராவின் சித்திப்பேட்டை மாவட்டம் தோகுடா மண்டலம் பெட்டா மசன்பள்ளியை சேர்ந்தவர் டல்லா வெங்கடேஷ். அதே பகுதியை சேர்ந்த தட்டிகொண்டா ராமம்மாவின் மகளை சில ஆண்டுகள் முன்பு திருமணம் செய்து கொண்டார். விவசாய தொழில் செய்து வந்த வெங்கடேஷ், 22 லட்சம் ரூபாய் வரை கடனில் சிக்கினார். கடனை அடைக்க முடியாமல் தவித்த வெங்கடேஷ், அதற்காக திட்டம் ஒன்றை தீட்டினார். மாமியார் ராமம்மா பெயரில் போஸ்ட் ஆபீசில் ஆண்டுக்கு 755 ரூபாய் செலுத்தி 15 லட்சம் ரூபாய்க்கு ஆக்சிடன்ட் பாலிசி எடுத்தார். எஸ்பிஐயில் ஆண்டுக்கு 2000 ரூபாய் செலுத்தி 40 லட்சத்துக்கு ஒரு ஆக்சிடன்ட் பாலிசி எடுத்தார். விவசாயி காப்பீட்டிற்காக 5 லட்சம் பெறலாம் என தனது சகோதரன் கருணாக்கரன் பெயரில் இருந்த 28 குண்டா நிலத்தையும் மாமியார் பெயரில் மாற்றி எழுதினார். பின்னர், கருணாக்கரின் உதவியுடன் மாமியாரை கொல்ல முடிவு செய்தார். விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என சொல்லி மாமியாரை அழைத்துள்ளார்.