உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிற்காமல் சென்ற சிறப்பு ரயில் ; கடைசியில் டிவிஸ்ட் | weekly special train | Tirunelveli

நிற்காமல் சென்ற சிறப்பு ரயில் ; கடைசியில் டிவிஸ்ட் | weekly special train | Tirunelveli

திருநெல்வேலி டு மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூலை 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, உள்ளிட்ட 19 ஸ்டேஷனில் நின்று செல்லும். மாலை 7 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடைகிறது. நேற்று மாலை திருநெல்வேலியிலிருந்து புறப்பட்ட ரயில் கல்லிடைக்குறிச்சி ஸ்டேஷனில் நிற்காமல் சென்றது. ரயிலுக்காக காத்திருந்த 55 பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ரயிலை இயக்கிய லோகோ பைலட் இந்த ரூட்டிற்கு புதியவர் என்பதால் ரயிலை நிறுத்தாமல் சென்றது தெரிய வந்தது. மன்னிப்பு கேட்ட துறை அதிகாரிகள் தகவல் கொடுத்து தென்காசியில் ரயிலை நிறுத்தினர். காத்திருந்த பயணிகளை ஈரோடு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தென்காசிக்கு வரும் வரை ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் சென்றதும் 10.30 மணியளவில் ரயில் கிளம்பி சென்றது. வழக்கமாக 9 மணிக்கு தென்காசியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. ஒரு அதிகாரியின் அலட்சியத்தால் ஒட்டு மொத்த பயணிகளும் அவதி அடைந்தனர்.

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி