தமிழர் விருப்பங்களை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும்: மோடி PM Modi | Sri Lanka Visit| Fisherman issue
தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு இலங்கை சென்றார். அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், இலங்கை வாழ் இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். இன்று கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு, பீரங்கி குண்டுகள் முழங்க இலங்கை அரசின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக மற்றும் அமைச்சர்கள் அவரை வரவேற்று அதிபர் செயலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இந்தியா - இலங்கை அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெற்றது. பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ராணுவம், எரிசக்தி, சுகாதாரம், டிஜிட்டல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இலங்கை அரசின் உயரிய விருதாக கருதப்படும் ஸ்ரீலங்கா மித்ர விபூஷ்ணா விருதினை இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, பிரதமர் மோடிக்கு அணிவித்து கௌரவித்தார்.