வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV D3 ராக்கெட்!
இஸ்ரோவின் SSLV-- D3 ராக்கெட் ஸ்ரீஹரிகேட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. EOS-8 என்ற அதிநவீன சாட்டிலைட்டை சுமந்து சென்ற ராக்கெட், 475 கிலோ மீட்டர் தொலைவில் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. EOS-08 சாட்டிலைட் 176 கிலோ எடை கொண்டது. புவி கண்ணிப்புக்காக இஸ்ரோ இதை வடிவமைத்து உள்ளது. குறிப்பாக, பேரிடர் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு பெரிதும் உதவும். இந்த சாட்டிலைட்டில் 3 முக்கிய ஆய்வுக் கருவிகள் உள்ளன. EOIR எனப்படும் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு கருவி, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமாக படம் பிடிக்க உதவும்.
ஆக 16, 2024