/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவி பந்து வீச்சை ஜாகீர்கான் பந்து வீச்சுடன் ஒப்பிட்ட சச்சின் sushila-meenas-bowling-action-lookin
மாணவி பந்து வீச்சை ஜாகீர்கான் பந்து வீச்சுடன் ஒப்பிட்ட சச்சின் sushila-meenas-bowling-action-lookin
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு பள்ளி மாணவியின் வேகப்பந்து வீச்சு வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த மாணவியின் பெயர் சுசிலா மீனா. மிருதுவான, அசாத்தியமான, பார்க்கவே அழகாக இருக்கும் அவரது பந்து வீச்சு, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானை போல இருப்பதாக சச்சின் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை ஜாகீர்கானுக்கும் பகிர்ந்து, நீங்களும் வீடியோவை பார்க்கிறீர்களா என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஜாகீர்கான், நீங்களே சொன்ன பிறகு அதை நான் மறுக்க முடியுமா, அந்த சிறுமியின் பந்து வீச்சு மிகவும் அழகாக, வியக்கத்தக்க வகையில் இருக்கிறது என பதில் அளித்தார்.
டிச 21, 2024