ஸ்ரீ பற்றி வதந்தி பரப்பாதீர் டைரக்டர் லோகேஷ் உருக்கம் | Tamil actor Sri | lokesh kanagaraj
2006ம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகராக அறிமுகமான ஸ்ரீ, அதன்பின் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இறுதிச்சுற்று படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாவே எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாதபடி மாறி இருந்தார் நடிகர் ஸ்ரீ. அவர் கடைசியாக நடித்த இறுகப்பற்று படத்தில் சம்பளம் உள்ளிட்ட பிரச்னை காரணமாக அவர் மனஅழுத்ததிற்கு ஆனதாகவும், அதனால் இப்படி ஆகிவிட்டதாகவும் சிலர் அவதூறு பரப்பினர்.