உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிளாக்கில் மது விற்பனை ஜோராக நடக்கும் காட்சி | TASMAC | Salem

பிளாக்கில் மது விற்பனை ஜோராக நடக்கும் காட்சி | TASMAC | Salem

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடக்கிறது. மது விற்கும் ஒரு சிலர் அவ்வப்போகுது கைது செய்யப்பட்டாலும் ஒரு சில வாரங்களில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மது விற்பனையை தொடர்கின்றனர். அரசு விடுமுறை நாட்கள், டாஸ்மாக் விடுமுறை நாட்களில் கூட பிளாக்கில் மது விற்பது ஜோராக நடக்கிறது. அதுவும் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி, கூலிங் பீருக்கு பிரிட்ஜ், தனி டம்ளர், சைடு டிஸ் என சகல வசதிகளும் கிடைக்கிறது. தற்போது மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையத்தில் ரோட்டு ஓரத்திலேயே மது விற்கப்பட்டுள்ளது. இது சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே தாசில்தார் அலுவலகம் அமைந்துள்ள பரபரப்பான பகுதியாகும். இங்கு மது பிரியர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஒரு டம்ளர் கூட கிடைக்குமாம். அளந்து ஊற்ற ஆய்வகத்தில் உள்ளது போல அளவு குடுவை வைத்துள்ளனர். கையில் பணம் இல்லை என்றால் ஜி பே செய்து கொள்ளலாம். வெயிலுக்கு இதமாக கூலிங்காக பீர் வேண்டும் என்றாலும் கிடைக்கிறது. சட்ட விரோத மது விற்பனையே சகல வசதிகளுடன் நடப்பதால் டாஸ்மாக் லீவு நாட்களில் இங்கே மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அரசு அதிகாரிகள் வந்து செல்லும் இடம். போலீசுக்கு மது விற்பனை குறித்து தெரிந்தும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என கேட்கின்றனர் ஆத்தூர் மக்கள்.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை