டாஸ்மாக் லீவா இருந்தா என்ன? கேட்டது கிடைக்குமாம் | TASMAC | Trichy
பீர் வாங்கலியோ! ரம் வாங்கலியோ! கூவி கூவி விற்கப்பட்ட மது கள்ள சந்தையில் கவனிப்பு தைப்பூசம், வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இருந்தும் டாஸ்மாக் அருகே உள்ள பார்களில் முன்கூட்டியே மதுபெட்டிகள் ஸ்டாக் வைக்கப்பட்டு பல இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது. திருச்சி மணப்பாறை காய்கறி சந்தை அருகே உள்ள பூட்டிருந்த டாஸ்மாக் கடைக்கு வெளியே பீர் வேணுமா? ரம் வேணுமா? என கேட்டு இளைஞர் ஒருவர் மதுவிற்பனையில் ஈடுபட்டார். தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் மது விற்பனை ஜோராக நடந்தும் காவல்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
பிப் 11, 2025