தெலுங்கு பட வில்லன் நடிகரை தியேட்டரில் வெளுத்த ரசிகை | Woman charges at telugu actor |
தெலுங்கு சினிமாவில் சம்ரன் ரெட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் லவ் ரெட்டி. வனி சன்னன்ரார்ய பதன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஷர்வானி கிருஷ்ணவேனி நாயகியாக நடித்துள்ளார். காதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைந்துள்ள இந்த படம் அக்டோபர் 18ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் என்.டி. ராமசாமி நடித்திருந்தார். படம் பார்த்த பலரும் காதல் ஜோடியை பிரிக்கும் கேரக்டரில் நடித்திருந்த அவரது வில்லத்தனத்தை பாராட்டுகின்றனர். இன்று ஐதராபாத்தில் உள்ள மல்டி ஃபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களை படம் முடிந்த பின் படக்குழுவினர் சந்தித்தனர். ஹவுஸ்புல் தியேட்டரில் இவர்களைப் பார்த்ததும் சர்பிரைஸ் ஆன ரசிர்கர்கள் ஆரவாரம் செய்தனர். பலர் போட்டோ, வீடியோ எடுத்த நிலையில் திடீரென படம் பார்த்த பெண் ஒருவர் வேக வேகமாக மேடையில் ஏறினார்.