உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவிரி படித்துறைகளில் ஆடிப்பெருக்கு வழிபாடு

காவிரி படித்துறைகளில் ஆடிப்பெருக்கு வழிபாடு

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு படித்துறைகள், கோயில்களில் பக்தர்கள் திரண்டு புனித நீராடி வழிபடுகின்றனர். கும்பகோணத்தில் காவிரி ஆற்று படித்துறைகளில் ஏராளமான பெண்கள், புதுமண தம்பதிகள் புனித நீராடினர். காவிரி தாய்க்கு தீபாராதனை காட்டி பெண்கள் தாலி கயிறு மாற்றிக்கொண்டனர். புதிதாக திருமணமான பெண்கள் தாலி பிரித்து கட்டிகொண்டனர். கும்பகோணம் மகா திவ்ய திரவுபதி அம்மன் கோயில் ஆணி தீமிதி நிகழ்ச்சியில் கூர்மையான ஆணிகள் கொண்ட இரும்பு தகட்டில் பக்தர்கள் இறங்கி தீ மித்தனர். பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பட்டு கிாரம மக்கள், 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவிற்கு குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சென்று வழிபட்டனர். திண்டுக்கல் வெக்காளியம்மன் கோயிலில் பக்தர்கள் 12 அடி அலகு குத்தி குழந்தைகளுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை