உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவி மரணத்தால் அதிர்ச்சி Government school Surandai tenkasi student mana

பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவி மரணத்தால் அதிர்ச்சி Government school Surandai tenkasi student mana

தென்காசி மாவட்டம் சுரண்டையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. 750க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 9ம் வகுப்பு மாணவி மானசா வயது 14 வழக்கம்போல பள்ளிக்கு உற்சாகமாக வந்தார். இண்டர்வெல் விட்டதும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தார். வராண்டாவில் நடந்து சென்ற மானசா திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியில் தோழிகள் அலறினர். உடனடியாக ஆசிரியர்கள் ஓடிவந்து, மானசாவை வாகனத்தில் ஏற்றி சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு போதுமான வசதிகள் இல்லை என கூறி, தென்காசி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர் தென்காசிக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி மானசா பரிதாபமாக இறந்தார். சுரண்டை போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின. கடந்த வாரம் வீட்டில் மானசா மயங்கி விழுந்துள்ளார். மானசாவின் அப்பா பிரகாஷ் கேரளாவில் சலூன் கடை வைத்துள்ளார். தான் ஊருக்கு வந்து டாக்டரிடம் கூட்டிப்போகிறேன் என மகளிடம் போனில் கூறியிருந்தார். அப்பா வந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போவார் என்பதால் வழக்கம்போல பள்ளிக்கு சென்றாள். இப்படி நடந்து விட்டது என குடும்பத்தினர் கதறி அழுதனர். மானசாவுக்கு 9ம் வகுப்பு பரீட்சை முடிந்துவிட்டது. அடுத்தது எஸ்எஸ்எல்சி என்பதால் ஸ்பெஷல் கிளாஸ் நடந்துள்ளது. அதற்காக பள்ளிக்கு சென்றபோதுதான் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அரசு பள்ளியிலேயே மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சுரண்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மானசா மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை என சிகிச்சை அளிக்கவில்லை. தென்காசிக்கு போகச் சொல்லி விட்டார்கள். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சுரண்டையில் அனைத்து வசதிகளுடன் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஏப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை