பயங்கரவாதத்துக்கு எதிராக கைகோர்த்த இந்தியா-அங்கோலா Terrorism|biggest threat |PM Modi|
அங்கோலா அதிபர் ஜோவோ மானுவல் கோன்கால்வ்ஸ் லாரென்கோ Joao Manuel Goncalves Laurenco 3 நாள் பயணமாக இன்று டில்லி வந்தார். ஜனாதிபதி திரவுபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர். பிரதமர் மோடியுடன் அங்கோலா அதிபர் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமர் மோடி கூறும்போது, பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இந்தியாவும் அங்கோலாவும் இந்த விஷயத்தில் ஒத்த கருத்தை கொண்டுள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருநாடுகளும் உறுதி பூண்டுள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவருக்கு எதிராக வலுவான நடவடிக்கையை எடுப்போம். அதில் நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் அங்கோலா தருகின்ற ஆதரவை பாராட்டுகிறோம் என பிரதமர் மோடி கூறினார்.