உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காத்திருக்கும் 60,000 ஆசிரியர்கள்; பணிநியமனம் செய்ய வேண்டும் TET | Teachers Eligibility Test

காத்திருக்கும் 60,000 ஆசிரியர்கள்; பணிநியமனம் செய்ய வேண்டும் TET | Teachers Eligibility Test

பணியில் உள்ள ஆசிரியர்கள், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் நவம்பரில் நடைபெற உள்ள டெட் தேர்வை எழுத, இதுவரை இல்லாத வகையில் 4.80 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, 2013 டெட் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்க தலைவர் இளங்கோவன் வரவேற்றார். அதே சமயம் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் தமிழக அரசு சிறப்பு டெட் தேர்வு நடத்தினால், அது தரமான ஆசிரியர்களை உருவாக்காது என்றார்.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை