உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்காவை மிரட்டிய டெக்சாஸ் பெரு வெள்ளம் Trump |Texas flood |major disaster |82 died | 41 missing

அமெரிக்காவை மிரட்டிய டெக்சாஸ் பெரு வெள்ளம் Trump |Texas flood |major disaster |82 died | 41 missing

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த 4ம் தேதி வரலாறு காணாத மழை பெய்தது. சில மாதங்கள் வரை பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் பெய்து தீர்த்ததாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்தது. அதுவும் கடந்த 100 ஆண்டுகளில் டெக்சாஸ் மாகாணம் பார்த்திராத மழையாம். இதனால் குவாடலூப் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊர்களுக்குள் புகுந்து பல இடங்களில் சேதத்தை விளைவித்தது. குறிப்பாக Kerr County கெர் கவுன்டி பகுதியில் மழை வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த மழைக்கு இதுவரை 82 பேர் இறந்துள்ளனர். கெர் கவுன்டியில் மட்டும் 28 குழந்தைகள் உள்பட 68 பேர் பலியாகி உள்ளனர். 41 பேரை காணவில்லை. பாலங்கள், சாலைகள் மற்றும் 12,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ஹெலிகாப்டர்கள், படகுகள், ட்ரோன்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை வெள்ளத்தால் பாதித்தவர்கள் 850க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். கவர்னர் கிரெக் அபோட், அவசர நிலையை அறிவித்து, மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இந்த துயர சம்பவத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேசிய பேரிடராக அறிவித்துள்ளார். டெக்சாஸ் பேரிடரில் பாதித்தவர்களுக்கு அனைத்து வகையிலும் அமெரிக்க அரசு உதவும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். விரைவில் அவர் டெக்சாஸ் வந்து பாதித்த இடங்களை ஆய்வு செயகிறார். தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ