காதலியுடன் நேரம் செலவழிக்க சம்பள லீவு தரும் நிறுவனம் Paid Leave for workers | Thailand | Dating Time
காதலிக்க சம்பளத்துடன் லீவு தாய்லாந்து கம்பெனி தாராளம் தாய்லாந்து நாட்டில் சுமார் 200 ஊழியர்களுடன் ஒயிட்லைன் என்ற பெயரில் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி செயல்படுகிறது. ஒரு ஊழியர் வேலை சுமையை சுட்டிக் காட்டி, காதலியுடன் டின்னர் சாப்பிட கூட போக முடியவில்லை என புலம்பி இருக்கிறார். கம்பனி பாஸ் காது வரை இந்த தகவல் போனது. அதற்கு பிறகு அந்த கம்பனி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட். கம்பெனி பாஸ் கொடுத்த ஆஃபர் அப்படி. ஊழியர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை சம்பளத்துடன் லீவு எடுத்துக்கொண்டு காதலியுடன் நேரத்தை செலவிடலாம். அதற்கான செலவுகளையும் கம்பனியே ஏற்றுக்கொள்ளும் என அறிவிப்பு வெளியிட்டார். ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், காதலியுடன் டேட்டிங் செல்லவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முதலாளியின் இந்த அறிவிப்புக்கு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதலாளியை அவர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். காதலிப்பவர்கள் மனதளவில் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். அப்படிப்பட்டவர்களை மகிழ்வித்தால், வேலையிலும் ஆர்வமுடன் செயல்படுவார்கள் என ஒயிட்லைன் கம்பனி மேனேஜர்கள் ஒரு ஆய்வு முடிவை காட்டிய பிறகே, முதலாளி அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.