/ தினமலர் டிவி
/ பொது
/ ரஷ்யாவின் உயரிய விருது மோடிக்கு வழங்கினார் புடின் | The Order of St. Andrew the Apostle | PMModi |
ரஷ்யாவின் உயரிய விருது மோடிக்கு வழங்கினார் புடின் | The Order of St. Andrew the Apostle | PMModi |
இந்தியா - ரஷ்யா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக 2 நாள் ரஷ்யா சென்றார். அதிபர் இல்லத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று இரவு புதின் மோடிக்கு விருந்து அளித்தார். இன்று இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி பேசினார். தொடர்ந்து 22வது உச்சி மாநாட்டில் புதினும் மோடியும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்தனர். எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஜூலை 09, 2024