உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புரோட்டா சாப்பிட்ட ஆசாமியின் நாடகம்: கடை ஓனர் ஷாக் | CCTV | Theni Hotel

புரோட்டா சாப்பிட்ட ஆசாமியின் நாடகம்: கடை ஓனர் ஷாக் | CCTV | Theni Hotel

தேனி அல்லிநகரத்தில் உள்ள ஹோட்டலுக்கு இரண்டு ஆசாமிகள் சனிக்கிழமை இரவு சாப்பிட வந்துள்ளனர். புரோட்டா ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். திடீரென கடை உரிமையாளர் சரவணனை அழைத்த இருவரும் புரோட்டாவில் முடி இருக்கிறது என கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். வேறு புரோட்டா தருகிறோம் என கூறியும் விடவில்லை. உணவு சுத்தமில்லாமல் இருக்கிறது. உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்புவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் கிளம்பிய பிறகு ஹோட்டல் உரிமையாளர் சரவணன் சிசிடிவி பதிவுகளை பார்த்துள்ளார். தகராறு செய்த இரண்டு ஆசாமிகளில் ஒருவர் அவரே தனது நெஞ்சு முடியை பிடுங்கி புரோட்டா மீது போட்டு நாடகமாடியது தெரியவந்தது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !