உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நவராத்திரி கொண்டாட திருவனந்தபுரம் புறப்பட்ட சிலைகள்! Thiruvithangur samasthanam | Navaratri Festival

நவராத்திரி கொண்டாட திருவனந்தபுரம் புறப்பட்ட சிலைகள்! Thiruvithangur samasthanam | Navaratri Festival

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா, 1840ம் ஆண்டுக்கு பின் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விழாவில் கலந்து கொள்ள, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோயில் உற்சவர் சிலைகள் யானை மீது பல்லக்கில் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். அங்கு நவராத்திரி விழாவில் பூஜைகளில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வருவது மரபு. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உட்பரிகை மாளிகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாள் மற்றும் சாமி சிலைகள் புறப்பாடு நடந்தது. சாமி சிலைகளுக்கு அரண்மனை வளாகத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. தமிழக, கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதன்பின் பக்தர்களால் மலர்தூவி வழியனுப்பி வைக்கப்பட்டது. சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை