உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தங்க கொடி மரம் பழுதுபார்த்த பின் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது |Tirumala Tirupathi | Brahmotsavam

தங்க கொடி மரம் பழுதுபார்த்த பின் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது |Tirumala Tirupathi | Brahmotsavam

திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க கொடி மரத்தில் திடீர் பழுது பிரம்மோற்சவ நாளில் பரபரப்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மாலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவகங்கியது. 12ம் தேதி வரை நடக்கும் இந்த உற்சவத்தில் தினமும் காலை மாலை இரு வேளையும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பிரம்மோற்சவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவர். அனுமந்த வாகனம் கருட வாகன சேவை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களுக்கு வழங்க கூடுதல் லட்டுகள் தயார்செய்யப்பட்டுள்ளன. இன்று மாலைகொடியேற்றத்தையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் பழைய கயிறு அகற்றப்பட்டது. அப்போது கயிறுடன் இரும்பு ராடும் கழன்று விழுந்தது. கோயில் கொடிமரத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதை அறித்த தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக அதை பழுது பார்த்து சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர். கொடி மரத்தை சரி செய்யும் பணியில் கோயில் ஊழியர்கள் பொறியாளர்கள் ஈடுபட்டனர். உடனடியாக சரி செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து இன்று முதலே பிரம்மாேற்சவ வைபவங்கள் துவங்கின. திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் கலப்படம் என எழுந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் கோயில் கொடி மரத்தில் பழுது ஏற்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் அது உடனடியாக சரி செய்யப்பட்டதால் பதற்றம் அடங்கியது.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி