ெண்கள் துணிந்து வர வேண்டும்; முதல் பெண் கண்டக்டர் விருப்பம் Tirunelveli first women bus conductor
திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் பஸ் கண்டக்டராக 38 வயதான பகவதி நியமிக்கப்பட்டு இருக்கிறார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயிலை சேர்ந்த பகவதி தற்போது திருநெல்வேலி டவுன்- அரசு மருத்துவமனை வழித்தடத்தில் இயக்கப்படும் நகர பஸ்சில் பணியாற்றுகிறார். கண்டக்டர் பணி கிடைத்ததன் மூலம் பகவதியின் 25 ஆண்டுகால கனவு நிறைவேறி இருக்கிறது. கனரக ஓட்டுநர் உரிமமும் பெற்றுள்ளார். கனரக வாகனத்தை திறம்பட ஓட்டம் திறன் தம்மிடம் இருப்பதாக நம்பிக்கையுடன் கூறுகிறார். பகவதியின் கணவர் வைரமுத்து லாரி டிரைவர். கால் நூற்றாண்டு கனவு நனவானதில் பகவதி மகிழ்ச்சியில் உள்ளார். கண்டக்டராக பெண் இருப்பதை பார்க்கும்போது பாதுகாப்புடன் உணர்வதாக பெண் பயணிகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறுகிறார். இதை ஒரு வேலையாக மட்டும் பார்க்காமல், சமூக சேவையாக செய்வதாக கூறும் பகவதி, தம்மை போலவே நிறைய பெண்கள் போக்குவரத்து துறைக்கு வர வேண்டும் என்கிறார். #Tirunelveli #WomenEmpowerment #BusConductor #WomenInTransport #BreakingBarriers #PioneeringWomen #Leadership #Inspiration #FemaleEmpowerment #PublicTransport #CulturalChange #WomenLeading #EmpoweredWomen