ஏழுமலையானுக்கு வந்த சோதனை... Tirupathi temple| laddu| TTD| Pawan kalyan
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக முதல்வர் சந்திரபாபு கிளப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இச்சூழலில், திருப்பதி கோயில் சொத்துகள் பாதுகாப்பு தொடர்பாக துணை முதல்வர் பவன் கல்யாண் சந்தேகம் கிளப்பி உள்ளார். அவரது அறிக்கை: திருமலை திருப்பதி ஏழுமலையான் மீது பக்தர்கள் நம்பிக்கை வைத்து சொத்துகளை கோயிலுக்கு தானமாக கொடுக்கிறார்கள். முந்தைய ஆட்சியில் இருந்த அறங்காவலர் குழு, அந்த சொத்துகளை விற்க முயன்றது. எனவே தேவஸ்தானத்தின் சொத்துகள், சுவாமியின் நகைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. பக்தர்கள் தானமாக வழங்கிய வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் அசையா சொத்துகள் உள்ளன. மும்பை ஹைதராபாத் நகரங்களில் பல கட்டங்கள் உள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு பக்தர்கள் வழங்கிய சொத்துகளை விற்க முடிவு செய்து அறிவிப்பு கூட வெளியிட்டது. கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்கு பதிலாக விற்க துடித்தது ஏன்? அப்படி செய்ய அவர்களை வழிநடத்தியது யார்?