விலங்கு வேட்டைக்கு போன 3 பேருக்கு காட்டில் நடந்த துயரம் electric fence three persons dies
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு, பெருமாபட்டு கிராமங்கள் மலையடிவாரத்தில் உள்ளன. இங்குள்ள காட்டுப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல் ஆகியவை அதிகமுள்ளன. பெருமாப்பட்டு அருகே உளள மூக்கனூரை சேர்ந்த சிங்காரம் (வயது 40), இவரது மகன் லோகேஷ் (வயது 14) மற்றும் கரிபிரான் (வயது 60) ஆகியோர் இன்று அதிகாலை விலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் புறப்பட்டனர். பெருமாபட்டை ஒட்டிய காட்டுப்பகுதியில் முயல், காட்டுப்பன்றிகளை விரட்டிச் சென்றனர். ஒரு விவசாய தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி வேலியை தாண்டி சென்றபோது, மூவரையும் மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே 3 பேரும் இறந்தனர். அந்த தோட்டம் முருகன் என்ற விவசாயிக்கு சொந்தமானது. வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற மின் வேலி அமைத்திருந்தார்.