மந்திரம் உச்சரித்து பெண்கள் பிரார்த்தனை | Tirupati | Tirupati Laddu | Tirupati Laddu Controversy
லட்டு சர்ச்சை.. தோஷம் விலக வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபாடு திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்ததாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில் கோயிலின் புனிதத்தை மீட்க திருப்பதியில் இன்று சாந்தி ஹோமம் நடந்தது. பூஜிக்கப்பட்ட புனித நீர் மூலவர் சன்னதி, லட்டு, அன்னபிரசாதம் தயாரிப்பு கூடங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டன. ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திர தினமான இன்று வேத விற்பன்னர்கள் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். கோயிலில் ஏற்பட்ட தோஷம் விலக மாலை 6 மணிக்கு பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, மந்திரம் படித்து வழிபடுமாறும் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண்கள் வீடுகள் முன் விளக்கேற்றி நாராயணா மந்திரத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்தனர். கன்னிமூல கணபதி கோயிலில் சிறப்பு வழிபாடும் நடந்தது.