உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இடைத்தரகர்களை தடுக்க தேவஸ்தானம் நடவடிக்கை | Tirupati | Tirupati Laddu | Andhra Pradesh | Tirupati

இடைத்தரகர்களை தடுக்க தேவஸ்தானம் நடவடிக்கை | Tirupati | Tirupati Laddu | Andhra Pradesh | Tirupati

திருப்பதியில் தினமும் 75 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இலவச தரிசனம் , 300 ரூபாய் டிக்கெட், விஐபி தரிசனம் என அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுண்டர்களில் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி தேவைப்படும் லட்டுக்களை பெறுவது வழக்கம். ஒரு பக்தருக்கு இரண்டு முதல் நான்கு லட்டுகள் வரை கூடுதலாக வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் லட்டு பிரசாதத்தை சில புரோக்கர்கள் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன. இதை கவனத்தில் கொண்டு ஆதார் கார்டு காண்பித்தால் மட்டுமே கூடுதல் லட்டு வாங்க முடியும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளதாக தகவல் பரவியது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை