உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கணவன், மனைவி வெட்டி சாய்ப்பு: நடந்தது என்ன? பரபரப்பு தகவல் | Crime News | Murder Case | Tiruppur

கணவன், மனைவி வெட்டி சாய்ப்பு: நடந்தது என்ன? பரபரப்பு தகவல் | Crime News | Murder Case | Tiruppur

தம்பதி வீடு புகுந்து சாய்ப்பு போதையில் விவசாயி வெறி பைக்கில் தப்பும்போது விபத்தில் சிக்கினார் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த துலுக்கமுத்தூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி 82. விவசாயி. இவரது மனைவி பர்வதம் 75. இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தோட்டத்து வீட்டில் தனியாக தங்கி விவசாயம் செய்து வந்தனர் இந்நிலையில், இன்று காலை கணவன், மனைவி இருவரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பழனிசாமி வாசலிலும், பர்வதம் படுக்கை அறையிலும் அரிவாளால் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைநை்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து விசாரித்தனர். பழனிசாமி வீட்டின் அருகில் அவரது உறவினரான சின்ன பெரியசாமி (80), அவர் மனைவி பாப்பாத்தியம்மாள் (75) வசிக்கின்றனர். அவர்களது மகன் ரமேஷ் (43). ரமேஷ்க்கு பழனிசாமி பெரியப்பா முறை வரும். திருமணம் ஆகாத ரமேஷ் கோழிகள் ஆடுகளை வளர்த்து வருகிறார். கோழிகள் அடிக்கடி பழனிசாமி வீட்டுக்கு போய் விடும். இதனால்பழனிசாமிக்கும் ரமேஷுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். என போலீசாரிடம் அக்கம் பக்கத்தினர் கூறினர். ரமேஷிடம் விசாரிக்க போலீசார் தேடியபோது, அவர் சாலை விபத்தில் சிக்கி அவினாசி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது. போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். ரமேஷிடம் விசாரித்தனர். இன்று காலை அவினாசிஅருகே பைக்கில் சென்றபோது, எதிரே வந்த வேனில் மோதி விட்டதாக சொன்னார். விபத்து நடந்தபோது ரமேஷ் புல் போதையில் இருந்ததாக டாக்டர்கள் கூறினர். விபத்து நடந்த இடத்துக்கும் ரமேஷ் வீட்டுக்கும் இடைவெளி 13 கிலோ மீட்டர். பைக்கில் 20 நிமிடங்களுக்குள் சென்று விடலாம். விபத்து நடப்பதற்கு முன் எங்கே இருந்தீர்கள்? என போலீசார் கேட்டபோது, வீட்ல, வெளியே என ரமேஷ் போதையில் மாற்றி மாற்றி பேசினார். முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொன்னார். ரெண்டு தட்டு தட்டி விசாரித்தபோது, பழனிசாமி மற்றும் பர்வதத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். வழக்கம்போல நேற்றிரவு பழனிசாமிக்கும் ரமேஷ்க்கும் தகராறு நடந்துள்ளது. ஆத்திரமடைந்த ரமேஷ் பழனிசாமியை கட்டையால் அடித்துவிட்டார். பிறகு வீட்டுக்கு சென்று மது குடித்துள்ளார். போதை தலைக்கேறியது. அரிவாளை எடுத்துக்கொண்டு இரவு 11 மணிக்கு பழனிசாமி வீட்டுக்கு போனார். வாசலுக்கு வந்த பழனிசாமியை அரிவாளால் வெட்டினார். பயந்து ஓடிய பர்வதத்தை படுக்கையறைக்குள் வைத்து வெட்டிக் கொன்றார். மது போதையில் ஆத்திரத்தில் இப்படி 2 பேரை கொலை செய்து விட்டோமா? என நினைத்து பயந்த ரமேஷ், மீண்டும் வீட்டுக்கு சென்று மது குடித்தார். தூக்கம் வரவில்லை. வெளியே வந்து வந்து எட்டி பார்த்தார். யாரும் பழனிசாமி வீட்டு பக்கம் போகவே இல்லை. அதிகாலை வரை தூங்காமல் பழனிசாமி வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். போலீஸ் வந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்தார். தப்பிச் செல்ல முடிவெடுத்து, இன்று காலை 8 மணிக்கு முன்பாகவே பைக்கில் கிளம்பினார். ஃபுல் போதையில் இருந்ததால் வேன் மீது வண்டியை விட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது. பெரியப்பா, பெரியம்மாவை கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், வேன் மோதியதில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். கொலைக்கு பயன்பட்ட அரிவாள், ரமேஷ் போட்டிருந்த ரத்தக்கறை படிந்த உடைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். கோழி மேய்ந்த தகராறில் ஒரு தம்பதியை உறவினரே வெட்டிக் கொன்ற சம்பவம் திருப்பூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை