வீட்டு கேட்டில் அரிவாளை உரசி அச்சுறுத்தல்! பகீர் சிசிடிவி | CCTV | Tiruppur | Police Investigation
அரிவாளுடன் திரியும் முகமூடி கொள்ளையன்! திருப்பூரில் ஷாக் சம்பவம் திருப்பூர், ஈரோடு என சென்ற ஆண்டு முதல் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. குறிப்பாக வயதான தம்பதிகள் கொல்லப்பட்டு நகைகள் திருடப்பட்டது. இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக சமீபத்தில் 3 பேர் கைதாகினர். ஓரளவுக்கு அங்குள்ள மக்கள் பயம் ஓய்ந்திருந்த நிலையில் திருப்பூரில் மீண்டும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. திருப்பூர் நாச்சி பாளையம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சில தினங்களாக வீட்டின் வெளியே வைக்கும் பொருட்கள் திருடு போகும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இரவில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதியினர் சந்தேகித்தனர். இந்த சூழலில் 17ம் தேதி இரவு முகமூடி அணிந்த ஒருவன் அரிவாளுடன் சுற்றி திரிந்த காட்சிகள் கிடைத்துள்ளது. ஒரு வீட்டில் திருட முயன்றுள்ளான். நாய் குரைக்கும் ஓசை கேட்டு எழுந்த வீட்டில் இருந்தவர்கள் இவனை கண்டு சத்தம் போட்டுள்ளனர்.