எக்ஸாம் ஹாலில் மாணவிகள் மேல் கைவைத்த ஆசிரியர் tirupur girl students issue | harassment in exam hall
திருப்பூர் வெங்கமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவிகளுக்கு தேர்வறை கண்காணிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பள்ளிக்கு அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமார் தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்த போது, திடீரென சிலரிடம் பிட் இருக்கிறதா என்று சோதனை செய்துள்ளார். அப்போது 6 மாணவிகளிடம் சோதனை செய்வது போல், உடலை ஆங்காங்கே தொட்டு பாலியல் சேட்டையில் ஈடுபட்டு இருக்கிறார். ஆசிரியரின் சில்மிஷத்தால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் 6 பேரும் அழுது கொண்டே தங்களுக்கு நடந்த கொடுமையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறினர். அவர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சம்பத்குமாரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.