மொழி, இனம், மாநிலம் கடந்து வென்ற காவிய காதல் | Tirupur marriage | Tirupur
காதலுக்கு மொழி, உடல், அழகு, பேச்சு ஒரு தடையே இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது திருப்பூரில் நடந்த சம்பவம். தென்காசி, போகநல்லூர், சுந்தரேசபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். வயது 33. இவரால் பேச முடியாது; காது கேட்கது. பிறவியிலேயே மாற்றுதிறனாளியாக பிறந்தவர். அதே போல ஒடிசா மாநிலம் ஹலிமுண்டா பகுதியை சேர்ந்தவர் நிஜாரி. வயது 32. தாய், தந்தை இல்லை. அண்ணன் மட்டும் ஒடிசாவில் இருக்கிறார். இவரும் பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுதிறனாளியாவர். திருப்பூர் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். மாற்றுதிறனாளிகளுக்கான குழு மூலம் சுரேஷ், நிஜாரி அறிமுகம் ஆனார்கள். சுரேஷ் தையல் கலையில் தேர்ச்சி பெற்று சொந்தமாக கடை வைத்துள்ளார். நிஜாரியும் திருப்பூரில் பனியன் தைக்கும் வேலை செய்வதால் இருவருக்கும் பழக்கம் உண்டானது. செல்போன் வீடியோ கால் மூலம் சைகை மொழி பேசி காதலித்தனர்.