/ தினமலர் டிவி
/ பொது
/ நிலச்சரிவின் கோர காட்சிகள்! 7 பேரின் கதி என்ன? | Tiruvannamalai landslide | landslide | Tiruvannamal
நிலச்சரிவின் கோர காட்சிகள்! 7 பேரின் கதி என்ன? | Tiruvannamalai landslide | landslide | Tiruvannamal
பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கொட்டிய கன மழையால், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வஉசி நகர் பகுதியில் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டன. ஒரு குடிசை வீடு முழுதும் மூழ்கியது. அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் பாதைகள் குறுகலாகவும், வீடுகள் நெருக்கமாகவும் அமைந்துள்ளன.
டிச 02, 2024