உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருவண்ணாமலை நிலச்சரிவில் நீடிக்கும் பதைபதைப்பு | Tiruvannamalai Landslide | fengal cyclone update

திருவண்ணாமலை நிலச்சரிவில் நீடிக்கும் பதைபதைப்பு | Tiruvannamalai Landslide | fengal cyclone update

பெஞ்சல் புயல் தாண்டவத்தால் திருவண்ணாமலையிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. கனமழை காரணமாக திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள தீப மலை அடிவாரத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சரிந்த மண் குவியலும் பாறையும் அடிவாரத்தில் உள்ள வீட்டை மூடியது. அந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கிக்கொண்டனர். நிலச்சரிவு நடந்த போது கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தது. சற்று தாமதமாக தான் இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. உடனடியாக அனைவரும் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு கீழே இறங்கினர். சம்பவம் குறித்து போலீஸ், தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளும் விரைந்தனர். இருட்டியதாலும், கனமழை காரணமாகவும் உடனடியாக மீட்பு பணியை துவங்க முடியவில்லை. அதிகாலையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் திருவண்ணாமலைக்கு வந்தனர். 2 மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் வீரர்கள் ஆய்வு செய்தனர். 16 மணி நேரம் கழித்து இப்போது மீட்பு பணி துவங்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இருப்பது ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது குழந்தைகள் 2 பேர் மற்றும் உறவினர்களின் 3 குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை