உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆசிரியர் முன்பே மாணவனை அடித்த சத்துணவு ஊழியர்கள் | Tiruvannamalai | Govt School

ஆசிரியர் முன்பே மாணவனை அடித்த சத்துணவு ஊழியர்கள் | Tiruvannamalai | Govt School

திருவண்ணாமலை செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மதிய உணவின்போது, முட்டை வழங்கப்படவில்லை. இது பற்றி மாணவன் ஒருவன் கேட்டபோது, முட்டை இல்லை என்று சத்துணவு ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த மாணவன் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு முட்டைகள் இருந்துள்ளன. முட்டைகள் வைத்துக்கொண்டே ஏன் இல்லை என சொல்கிறீர்கள் என அந்த மாணவன் கேட்டுள்ளான். கோபம் அடைந்த சத்துணவு ஊழியர்கள், வகுப்பறைக்குள் புகுந்து, அனுமதி இல்லாமல் ஏன் சமையல் அறைக்குள் ஏன் சென்றான் எனக்கேட்டு, அந்த மாணவனை துடைப்பத்தால் தாக்கியுள்ளனர்.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !