தமிழகத்தை உலுக்கும் முதல் மரணம்: GBS பாதிப்பு பின்னணி | TN first gbs death | guillain barre syndrome
தமிழகம் வந்த உயிர் குடிக்கும் நோய் திருவள்ளூரில் நேர்ந்த முதல் மரணம் பீதியை கிளப்பும் GBS பாதிப்பு மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தை ஜிபிஎஸ் என்று அழைக்கப்படும் guillain barre syndrome என்ற அரிய வகை பாதிப்பு உலுக்க ஆரம்பித்தது. மக்கள் பீதி அடைந்ததால் ஆய்வு நடத்த 8 பேர் குழுவை மத்திய அரசு நியமித்து இருந்தது. இப்போது அதே ஜிபிஎஸ் பாதிப்பால் தமிழகத்தில் சிறுவன் மரணம் அடைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரேம்குமார் மகன் மைத்தீஸ்வரன் வயது 9. நான்காம் வகுப்பு படித்து வந்தான். ஜனவரி 22ம் தேதி வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கிரவுன்ட்டில் சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தான். திடீரென நடக்க முடியாமல் கீழே விழுந்தான். அவனது இரண்டு கால்களும் செயல்பட முடியாமல் போனது. அங்கிருந்த இளைஞர்கள் அவனை வீட்டுக்கு தூக்கி சென்றனர். மைத்தீஸ்வரன் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவனை வேப்பம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சிறுவனுக்கு மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் வழங்கினர். பின்னர் வீட்டில் ஓய்வெடுத்த மைத்தீஸ்வரன், மீண்டும் நடக்க முடியாமல் அவதிப்பட்டான். அவனை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை எக்மோர் குழந்தைகள் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.