தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் முழுவிவரம் | TN govt | CM Stalin | Diwali bonus
போனஸ் யாருக்கு எவ்வளவு? தமிழக அரசு வெளியிட்ட அப்டேட் தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்பதை கருத்தில் கொண்டு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 இன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.