உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திடீர் ட்விஸ்ட்... டிட்வா புயலால் பக் பக் tn heavy rain | chennai imd | cyclone ditwah | weatherman

திடீர் ட்விஸ்ட்... டிட்வா புயலால் பக் பக் tn heavy rain | chennai imd | cyclone ditwah | weatherman

இலங்கை மற்றும் அதையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான டிட்வா புயல், தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக இலங்கையில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. அங்கு நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 41 பேர் வரை இறந்துள்ளனர். தமிழகம் நோக்கி புயல் நகர்வதால், இன்று முதல் 3 நாட்களுக்கு கடலோர மற்றும் வடமாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று நாகை, புதுக்கோட்டை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிட்வா புயல் குறித்து தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் பரபரப்பு தகவலை கூறி உள்ளார். அவரது அறிக்கை: டிட்வா புயல் இப்போது இலங்கையின் கரடு முரடான மலைகளில் மோதியபடி நகர்கிறது. இதனால் புயல் வலுவிழந்து விட்டது. புயல் வடக்கு நோக்கி நகரும் நிலையில், இலங்கையில் இன்றும் கனமழை கொட்டித்தீர்க்கும். இதற்கு பிறகு கனமழைக்கு வாய்ப்பில்லை. மலைகளை தாண்டி கடல் பரப்புக்குள் வந்த உடன் மீண்டும் புயல் தீவிரம் அடைந்து விடும். இலங்கையின் வடக்கு கடல் பகுதியை புயல் நெருங்கி வர இருப்பதால், அடுத்த 24 மணி நேரத்துக்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை, தஞ்சையின் தெற்கு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்க்கும். அதே நேரம் தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு அதி கனமழைக்கோ வாய்ப்பில்லை என்று பிரதீப் ஜான் கூறி உள்ளார். #CycloneDitwah #ChennaiHeavyRain #IMDRainToday #IMDChennai #ChennaiWeather #TamilNaduWeather #RainAlert #HeavyRain #WeatherUpdate #StormWarning #Monsoon2023 #RainfallPrediction #ChennaiForecast #TamilNaduFlood #ChennaiRainfall #WeatherApp #IMDUpdates #RainyDays #TamilNaduNews #ChennaiStatus

நவ 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை