கள்ள மார்க்கெட்டில் ரேஷன் அரிசி விற்பனையை தடுக்க ஆளில்லையா? TN Ration Shop | Rice sale | Black Marke
ரேஷனில் வாங்கும் அரிசி எங்கு போகிறது பாருங்கள்! கடை முன்பே களைகட்டும் விற்பனை! தமிழக ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கும் பலர் சொந்த பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துவதில்லை. வெளிமார்க்கெட்டில் விற்று பணம் பார்க்கின்றனர். சென்னை புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள ரேஷன் கடை முன்பே புரோக்கர்கள் அரிசியை வாங்குகின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கடை முன்பே ரேஷன் அரிசி விற்பனை நடந்தாலும் இதை யாரும் கண்டு கொள்வதில்லை. அரிசியை வாங்கி விற்க புரோக்கர்கள் பலர் செயல்படுகின்றனர். அவர்கள் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ஓட்டல்களுக்கும், வடமாநிலத்தவர்களும் அதிக விலைக்கு விற்கின்றனர். ஓட்டல்களில் மாவு அரைப்பதற்கு இந்த அரிசி தான் பயன்படுத்தப்படுகிறது. அரிசி வாங்கும் மக்களிடம் கிலோ 5 முதல் 8 ரூபாய் வரை கொடுத்து புரோக்கர்கள் வாங்குகின்றனர். அதை விட அதிக விலை வைத்து ஓட்டல்களுக்கு விற்று விடுகின்றனர்.