உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயிலை காக்க புதிய பிரசார திட்டத்தை துவக்கிய ஹிந்து முன்னணி! TN Temples | HR&CE | Hindu Munnani

கோயிலை காக்க புதிய பிரசார திட்டத்தை துவக்கிய ஹிந்து முன்னணி! TN Temples | HR&CE | Hindu Munnani

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயில் நிதியில் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட்டில், அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் 35 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடக்கவில்லை. 19 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் நடக்கிறது. கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலம், 23 ஆயிரம் கடைகள், 75,500 கட்டடங்கள் உள்ளன. ஆண்டு வருமானம், 345 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளது. மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்துார் போன்ற பல கோயில்களில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கையாக பல கோடி ரூபாய் வருகிறது. அதெல்லாம் எங்கே செல்கிறது? அறநிலையத் துறையின் அனாவசிய செலவு, ஊழல்களால் கோயில் நிதி சுரண்டப் படுகிறது. இந்த அவல நிலையை அகற்ற, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று, நம்ம சுவாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம் என்ற பிரசாரத்தை பக்தர்களிடம் சேர்க்க இருக்கிறோம். ஹிந்துக்கள் அனைவரும், கோயிலை பாதுகாக்க முன்வர வேண்டும். கோயில்களை திட்டமிட்டு சிதைத்து, கோயில் சொத்துக்களை சுரண்டும் போக்கை தட்டிக் கேட்கும் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பக்தர்கள், தங்கள் பகுதியின் வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை பாதுகாக்க, துடிப்புடன் களத்தில் இறங்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

ஆக 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ