29 ஊரில் ஊற்றும் கனமழை-முக்கிய அப்டேட் chennai orange alert | tn weather today imd heavy rain alert
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், 40 இடங்களில் கன மழையும், ஐந்து இடங்களில் மிக கன மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் தேக்கடி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், 16 செ.மீ., மழை பெய்துஉள்ளது. வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 24ம் தேதி உருவாகும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பாகவே, அதாவது, 21ம் தேதியே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு ஒரு வாரம் முன்பே தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. பருவமழை துவங்கிய நாளில் இருந்து பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்த கனமழை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன் அறிக்கை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிக்கு அப்பால் நேற்று அதிகாலை உருவான காற்றழுத்த தாழ்வு அடுத்த சில மணி நேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதே நேறம், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும். இந்த வானிலை மாற்றங்கள் காரணமாக இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்க்கும். 21ம் தேதியை பொறுத்தவரை விழுப்புரம், செங்கல்பட்டு, கடலுார், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. 22ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழை கொட்டித்தீர்க்கும். அதே நாளில் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். வரும் 23ம் தேதியை பொறுத்தவரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நாள் நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 24ம் தேதியில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. #RainToday #TamilNaduRainAlert #ChennaiRainToday #TamilNaduWeatherAlert #WeatherUpdate #ChennaiWeather #RainyDay #TamilNadu #Chennai #WeatherForecast #RainAlert #ClimateUpdate #StormWatch #WeatherNews #RainySeason #Monsoon #StaySafe #WeatherWarnings #LocalWeather #ChennaiRain