இதுதான் முதல் புயல்! வெதர்மேன் பரபரப்பு தகவல் tn weatherman | chennai rain alert | tn weather today
வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கும் நிலையில், அடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவெடுக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி உள்ளார். மழை நிலவரம் குறித்து அவர் கூறியது: வங்கக்கடலில் இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், அடுத்த 2, 3 நாள்களுக்கு பலத்த மழை கொட்டித்தீர்க்கும். அதே நேரம் இம்மாதம் 25 அல்லது 26 வாக்கில் இன்னொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இம்மாத இறுதியில் அது புயலாக வலுப்பெறும் என்று கூறி உள்ளார். இப்போது நிலவி வரும் வானிலை காரணமாக இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக, நாகை, திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் இன்று கனமழை கொட்டித்தீர்க்கும் என்றும் வெதர்மேன் கூறி உள்ளார். #RainToday #TamilNaduRainAlert #ChennaiRainToday #TamilNaduWeatherAlert #WeatherUpdate #ChennaiWeather #RainyDay #TamilNadu #Chennai #WeatherForecast #RainAlert #ClimateUpdate #StormWatch #WeatherNews #RainySeason #Monsoon #StaySafe #WeatherWarnings #LocalWeather #ChennaiRain