செந்தில் பொறுப்பு மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியம் | TNEB | Rain Warning
கோவை அன்னூர் அருகே உள்ளது ஒன்னக்கரசம்பாளையம் கிராமம். இங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது கடந்த சில நாட்களுக்கு முன் அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. அதில் ஒரு மின்கம்பி 90 சதவிகிதம் அறுந்து எப்போது வேண்டுமானாலும் தரையில் விழும் நிலையில் உள்ளது. இது குறித்து ஒன்னக்கரசம்பாளையம் கிராம மக்கள் பொகலூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர் ஆனால் மின்வாரிய அதிகாரிகள் காதில் வாங்கி கொள்ளவில்லை என்கின்றனர் ஊர் மக்கள்.
அக் 14, 2024