/ தினமலர் டிவி
/ பொது
/ மேல்முறையீடு செய்த அரசுக்கு 50 ஆயிரம் பைன் | TNGovt | Madurai High court | Madurai refugee camp
மேல்முறையீடு செய்த அரசுக்கு 50 ஆயிரம் பைன் | TNGovt | Madurai High court | Madurai refugee camp
மதுரை மேலூர் அருகே திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அதிபதி. இவரது 11 வயது மகள் சரண்யா, 2014ல் முகாமில் மழையின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் இறந்தார். இது தொடர்பான வழக்கில் 5 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை கோரி, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோபமடைந்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய கூச்சமாக இல்லையா என காட்டமாக கேள்வி எழுப்பினர். எந்த அடிப்படையில் மேல்முறையீடு செய்தீர்கள்?
ஆக 22, 2024