உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவின் டாப் 10 பட்டியல் | top Indian city for women | Avatar report

இந்தியாவின் டாப் 10 பட்டியல் | top Indian city for women | Avatar report

பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் சென்னை எத்தனாவது இடம் தெரியுமா? தனியார் நிறுவனமான அவதார் குழுமம் சார்பில் 2024ல் இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் கணக்கெடுப்பு நடந்தது. பிப்ரவரி முதல் நவம்பர் வரை நாடு முழுதும் 120 நகரங்களில் மக்களிடம் கருத்து கேட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு சாதகமான, பாதுகாப்பான சூழல் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் டாப் 10 நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் பெங்களூரு உள்ளது. 2023ல் சென்னை முதலிடத்தில் இருந்தது. அரசு தரப்பில் அதை பெருமிதமாக குறிப்பிட்டு வந்தனர் இப்போது சென்னை இரண்டாம் இடத்துக்கு பின் தங்கியுள்ளது.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி